மலைகள் நம்மக்கு என்ன சைய்கின்றன ?

மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் அதன் அமைப்பு பற்றி கூகிள் செயற்கைக்கோள் வியூவில் பாருங்கள்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அருகில் உள்ள அனைத்து இடங்களும் நல்ல மழைவளம் பெற்று பச்சைபசேலென இருக்கும். அதனால்தான் நமது குமரி மாவட்டமும் சொர்க்க பூமியாக இருக்கிறது.
மலைகளின் கிழக்கு பக்கமுள்ள அணைத்து இடங்களும் வறண்ட பூமியாக இருக்கும்.

இது ஏன் தெரியுமா ?


மேற்குபக்கம் உள்ள அரபிக்கடலின்மீதிருந்து கிழக்கு நோக்கி வரும் ஈர காற்றை இந்த மேற்குத்தொடர்ச்சி மலைகள் தான் தடுத்து நமக்கு மழையாக தருகின்றன.
இந்த மலையை உடைப்பதனால் அரபிக்கடலின் மேலிருந்து கிழக்கு நோக்கி வரும் ஈர காற்று வேகமாக கிழக்கு நோக்கி சென்றுவிடும். அப்போது நமது குமரி மாவட்டத்திற்கு மழை என்பது கானல் நீராகிவிடும் .....

ஆரல்வாய்மொழி பக்கம் அதிகமான காற்றாலையை பார்த்திருப்போம் ஏன் அந்த இடத்தில் மட்டும் இவ்வளவு காற்றாலை ? இதை சற்று கவனமாக ஆராய்ந்தால் நமக்கு ஒரு உண்மை தெரியும்.

இந்த மேற்குத்தொடர்ச்சி மலைகள் ஆரல்வாய்மொழி மலையுடன் முடிவு பெறுகிறது. அதற்கு முன்பாக ஒரு இடைவெளி இருக்கிறது இந்த மேற்குத்தொடர்ச்சி மலைக்கு. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றானது இந்த இடைவெளி வழியாகத்தான் வேகமாக கடந்து செல்கிறது. இதுதான் அந்த உண்மை .

மற்றும் ஒரு உண்மை இருக்கிறது. என்ன அது ???

இப்படி வேகமாக கடந்து போகும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்துவது அந்த காற்றின் வழி பாதையில் இயற்கையாக உள்ள தொட்டியோடு ,சுங்கான்கடை பகுதி மலைகள்தான். இந்த மலைகள்தான் இப்போது திட்டமிட்டு கொள்ளையடிக்க படுகின்றன. ஒருமுறை மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் அதன் அமைப்பு பற்றி கூகிள் செயற்கைக்கோள் வியூவில் பாருங்கள் அப்போது இந்த உண்மை தெளிவாக தெரியும். 

சமீப காலமாக கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள இந்த மலைகள்தான் இப்போது திட்டமிட்டு கொள்ளையடிக்க படுகின்றன. இந்த நிலை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் நமது குமரி மாவட்டமும் பாலைவனம் ஆவது நிச்சயம்....